பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்: சோகத்தில் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகில் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலான பாரதி கண்ணம்மா டாப் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
பாரதியும், கண்ணம்மாவும் இணைவது எப்போது? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த வாரம் பாரதி கண்ணம்மாவின் வீட்டில் தங்க சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்தளித்தது என்றே கூறலாம்.

இதில் முக்கிய கதாப்பாத்திரங்களான அஞ்சலி கேரக்டரில் ஸ்வீட்டியும், அகிலன் கேரக்டரில் அகிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அஞ்சலியாக நடிக்கும் ஸ்வீட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சீரியலில் கணவனாக நடிக்கும் அகிலனை டாக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் இது போன்ற எடிட்டை இனி மிஸ் செய்வோம். என்று பதிவிட்டுள்ளார்.
எனவே அகில் பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகப்போகிறார் என தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.