நள்ளிரவில் கண்விழித்த பாரதி: வீட்டில் கண்ணம்மா படும் கஷ்டம்! வேற லெவல் ப்ரொமோ காட்சி
பாரதி கண்ணம்மாவில் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துவிட்டு எப்பொழுது இருவரும் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடையே அதிகமாக இருக்கின்றது.
ஆனால் இயக்குனர் இந்த சீனை தவிர அளவுக்கு அதிகமாக டிவிஸ்ட்டினை சீரியலில் வைத்து வருகின்றார்.
கடந்த வாரத்தில் கண்ணம்மா வீட்டில் தஞ்சம் புகுந்த பாரதி, அங்கு சில தர்ம சங்கடத்தில் பிள்ளைகளின் பாச தொல்லையால் அங்கே தங்கியுள்ளார்.
இந்நிலையில் இரவில் கண்விழித்து கண்ணம்மா தனது மாவு வியாபரத்திற்காக மாவு கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருக்கின்றார். அப்போது பாரதி கண்விழித்து கண்ணம்மாவிடம் வந்து பேசுகின்றார்.
இந்த ப்ரொமோவிலும் இவர்களது கண்கள் பேசும் காட்சி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.