பாரதி கண்ணம்மாவில் அதிரடி சம்பவம்: வில்லி வெண்பாவை சுட்டுக்கொன்ற சௌந்தர்யா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா வில்லி வெண்பாவை சுட்டுக் கொன்ற காட்சி வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. குறித்த சீரியலில் நடிகை பரீனா வில்லி வெண்பாவாக நடித்து பல சூழ்ச்சிகளை செய்து பாரதியையும், கண்ணம்மாவையும் பிரித்துள்ளார்.
கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், ஒன்று பாரதியுடனும், மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடம் வளர்ந்து வருகின்றது. ஆனால் பாரதிக்கு தனக்கும், கண்ணம்மாவிற்கும் பிறந்த குழந்தை தான் ஹேமா என்பது தெரியாமலேயே வளர்த்து வருகின்றனர்.
ஹேமா தன்னுடைய குழந்தை என்று இதுவரை தெரியாமல் இருந்த கண்ணம்மாவிற்கு தற்போது சௌந்தர்யா மூலம் உண்மை தெரியவந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ப்ரொமோ ஒன்று வெளியானது.
இதில் கண்ணம்மா வேகமாக ஹேமாவை சந்தித்து நான் உனக்கு அம்மா என சொல்ல போகிறார். பாரதி அதற்கு என்ன செய்ய போகிறார் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வில்லி வெண்பாவை சௌந்தர்யா சுட்டு கொல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெண்பாவாக நடித்துவரும் நடிகை ஃபரினா தான் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது இப்படி ஒரு காட்சியில் நடித்து இருப்பதைக் குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் குறித்த காட்சி கனவில் வருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் சரமாறியாக வறுத்தெடுத்துள்ளனர்.
