மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு வந்த பாரதி: அதிரடியாக கண்ணம்மா காட்டிய கெத்து! வேற லெவல் ப்ரொமோ
நேற்றைய தினத்தில் கண்ணம்மாவின் வீட்டில் ஹோமாவுடன் இருந்து உணவருந்தும் புகைப்படம் வைரலாகிய நிலையில் தற்போது புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
ஹேமாவிற்காக பாரதி-கண்ணம்மா ஒன்றாக இணைந்துள்ள எபிசோடுகள் பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த சீரியலில் கடந்த இரண்டு வாரங்களாக அதிரடிக்கு மேல் அதிரடி அரங்கேறி வருகின்றது. இப்படி பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முடிவுக்கு வர ஒரே ஒரு DNA டெஸ்ட் போதும் என்றாலும் இயக்குனர் மாதக்கணக்கில் சீரியலை இழுத்து வருகின்றார்.
இந்நிலையில் இனிவரும் நாட்களில் இந்த சீரியலில் என்ன நடக்கவிருக்கின்றது என்ற ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இக்காட்சி பாரதி கண்ணம்மாவினை, ஹேமாவிற்காக தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல பாரதி வருகின்றார். ஆனால் கண்ணம்மா மிகவும் கெத்தாக தான் ஏன் வர வேண்டும்? ஹேமாவை இங்கே அழைத்து வாருங்கள்... நான் பார்த்துக்கொள்கிறேன் என்று திருப்பி அனுப்புகின்றார்.
இதனால் பாரதி வேறு வழியில்லாமல் ஹேமாவை பிரிந்து இருக்க முடியாமல் கண்ணம்மா வீட்டிலேயே தஞ்சம் புகுந்துள்ளதை தான் பிரபல ரிவி நேற்றை தினத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளது தற்போது ரசிகர்களுக்கு தெளிவாக தெரியவந்துள்ளது.