கண்ணம்மாவா இது? கிளாமர் படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்பிரியனின் கிளாமரான புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில், நடித்து வருபவர் ரோஷினி ஹரிபிரியன்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ரோஷினி ஹரிப்ரியன், செயின்ட் மேரீஸ் பெண்கள் பள்ளியில் பள்ளி படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

கல்லூரி முடித்ததும், ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ரோஷினி, அங்கு இரண்டு வருடம் வேலை செய்திருக்கிறார். பின்னர் வேலையை விட்டு விட்டு மாடலிங் துறைக்குள் புகுந்திருக்கிறார்.
பின்னர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ரோஷினி, அங்கு மார்டன் உடையில் தனது விதவிதமான படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில் அவரது கிளாமரான படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், சீரியலில் சேலையில் நடிக்கும் ரோஷினியா என அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.