டிஎன்ஏ டெஸ்ட் ரகசியம் உடைந்தது? கிளைமாக்ஸில் கண்ணம்மா எடுக்க போகும் அதிரடி முடிவு! அடுத்த ட்விஸ்ட்
பாரதி கண்ணம்மா சீரியலில் பலரும் எதிர்ப்பார்த்த அந்த தருணம் வந்து விட்டது.
சற்று முன்னர் வெளியான ப்ரோமோவில் ஹேமாவின் தந்தை நான் தான் என்று பாரதி குறிப்பிடுகின்றார்.
டிஎன்ஏ டெஸ்ட்டை ஒருவழியாக எடுத்து உண்மையை தெரிந்து கொண்ட பாரதி வீட்டுக்கு திரும்புகின்றார்.
அடுத்த ட்விஸ்ட்
மகள் ஹேமா அப்பா யாரு என்று தெரிந்து கொள்ள தற்கொலை முயற்சி செய்கின்றார். உடனே வந்த பாரதி நான் தான் உன் தந்தை கண்ணமாவின் கணவர் என்பதை அனைவர் மத்தியிலும் குறிப்பிடுகின்றார்.
இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் கண்ணம்மா என்ன முடிவை எடுக்க போகின்றார் என்று தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
பாகம் இரண்டா?
இதேவேளை, குழந்தைகளுக்கு உண்மை தெரிந்த பிறகு கண்ணம்மா குழந்தைகளுடன் சென்றுவிடுவதாகவும், அதற்கு பிறகு பாகம் இரண்டு ஆரம்பமாகும் என்ற செய்திகளும் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.