கண்ணமாவுடன் ஒரே வீட்டில் இருக்கும் பாரதி! யாரும் எதிர்ப்பாராத திருப்பம்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றார்கள்.
இந்த நிலையில் பாரதி ஹேமாவுக்காக கண்ணம்மாவை வீட்டுக்கு அழைப்பதும், கண்ணம்மா வர முடியாது என்று கூறுவதும் போன்ற ப்ரோமோக்கள் வெளியாகியிருந்தது.
தற்போது , பாரதி கண்ணம்மாவின் வீட்டில் தனது 2 மகள்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேரும் நாள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அழகான குடும்பமாக அவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. எனினும், தற்போது ஹேமாவிற்காக பாரதி-கண்ணம்மா ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரும் நாட்களில் தொடரில் அதிரடியான திருப்பங்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.