பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய நடிகர் மாற்றம்! யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
பாரதி கண்ணம்மாவில் மறைந்த நடிகர் வெங்கட் கேரக்டரில் நடிக்க போகும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்து வந்த வெங்கடேஷ் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாரதி கண்ணம்மாவில் வெங்கடேஷ் நடித்து வந்த ரோலுக்கு புது நடிகர் யாரும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்தனர்.

கதாபாத்திரத்தையே கதையில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் புதிய நடிகர் நடிக்க தொடங்கி இருக்கிறார். கண்ணம்மாவை அவர் சந்திப்பது போல காட்டப்பட்டு உள்ளது.
இதே நடிகர் தான் வெங்கடேஷ் நடித்து வந்த மற்ற சில சீரியல்களிலும் அவருக்கு பதில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி கண்ணம்மாவில் வெங்கடேஷுக்கு பதில் நடிக்கும் நடிகரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.