ஐசியூ-வில் கண்ணம்மா.. ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியில் பாரதி!!!!
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். எப்போது கண்ணம்மா பாரதியுடன் இணைவார், பாரதி வெண்பாவின் சூழ்ச்சி வலையை புரிந்து கொள்வாரா என்பதே பலரது எதிர்பார்ப்பு. ஒவ்வொரு வாரமும் பல டுவிஸ்களுடன் களமிறங்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், இந்த வாரம் கண்ணம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
சாலையிலேயே அவர் மயங்கி விழுந்துவிட, பாரதி கண்ணம்மாவை தன் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு ஐசியூவில் இருக்கும் போதுகூட மாமா பாரதியின் நினைப்பில் தவிக்கிறார் கண்ணம்மா.
இதற்கிடையே அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைகிறார் பாரதி.
கண்ணம்மாவை பாரதி குணப்படுத்தி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.