பாரதியுடன் வரமறுத்த கண்ணம்மா! ஏற்பட்ட திடீர் திருப்பம்... விபத்தை ஏற்படுத்திய பாரதியின் பரபரப்பு ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாரதி-கண்ணம்மா இருவரும் இணைவார்களா என்பது ஒருபுறம் பெரிய கேள்வியாக இருந்தாலும் மறுபுறம் பாரதி அமெரிக்கா செல்வாரா என்பது இன்னொரு கேள்வியாக இருந்தது.
தற்போது ஹேமா அமெரிக்கா செல்வது அவரது உடல்நலக் கோளாறினால் தடைபட்டுள்ளது. விமான நிலையம் செல்லும் வழியிலேயே திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் குழந்தையை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
குழந்தையை காப்பாற்ற சமையல் அம்மா தான் வர வேண்டும் என்ற கட்டாயத்தினால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு அவரை அழைப்பதற்கு செல்கின்றார்.
இந்நிலையில் கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி அவரை அழைக்கின்றார், ஆரம்பத்தில் வர மறுத்த கண்ணம்மா பின்பு வருவதற்கு சம்மதிக்கின்றார். ஆனால் ஹோமாக்காவே தான் வருவதாக கூறி வருகின்றார்.