மனைவி கண்ணம்மாவை பெண் பார்க்க வந்த பாரதி! வேற லெவல் ரொமான்ஸ் காட்சி: நடிகரே இப்படி சீரியலை அசிங்கப்படுத்திட்டாங்களே?
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் மீண்டும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்தில் நடக்கும் சடங்குகள் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஒரு வழியாக பாரதியும் கண்ணம்மாவும் தாமரையின் உதவியுடன் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், தற்போது இவர்களின் திருமண ஏற்பாடு பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
புதிதாக நடக்கும் திருமணத்தை போன்று பெண் பார்க்கும் நிகழ்வு, மெகந்தி நிகழ்வு என அனைத்தும் நடக்கவுள்ளது. கண்ணம்மாவிற்காக பாரதியே முகூர்த்த புடவையே தானே நெய்து தருவதற்கு முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தனது மனைவி கண்ணம்மாவையே மறுபடியும் பெண் பார்க்க வந்த பாரதி ரொமான்ஸை அள்ளி வீசியுள்ளார்.
வெட்கத்தில் பாரதியின் முகம்
குழந்தைகள் ஆசைபட்டது போன்று கண்ணம்மாவை பெண் பார்க்க வந்துள்ள பாரதி அவரைப் பார்த்து, பயங்கரமாக ரொமான்ஸ் செய்கின்றார். மேலும் பெண்ணை பாட கூறுகின்றனர்.
உடனே கண்ணம்மா வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வரும் ஏ மல்லிப்பூ பாடலைப் பாடி அசத்தியுள்ளார். இப்பாடலை பாடும் போது பாரதியின் ரியாக்ஷன் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
பின்பு கண்ணம்மாவின் தந்தையிடம் தனியாக பேச அழைத்த பாரதி, மீண்டும் குழந்தை என்று பேச்சை ஆரம்பித்துள்ளார். பாரதியுடன் சுற்றிக்கொண்டிருந்த நபர் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரும் மறைந்திருந்து பார்த்தனர்.
பின்பு திடீரென பாரதியின் சகளை மீண்டும் குழந்தையை பற்றி பேச வேண்டாம்... இவ்வாறு பேசி தான் 1000 எபிசோட்டுக்கு மேல இந்த கதை இழுத்துட்டு வந்துருக்கு... அப்பறம் ஒரு தென்றல் புயலாக வருதே என்று பாடல் ஒலிக்க கண்ணம்மா மீண்டும் பையை எடுத்து கிளம்பிடுவார் என்று கூறி சீரியலை நன்றாகவே கழுவி ஊற்றியுள்ளார்.