பாரதியால் வெண்பா கர்ப்பமா? கதையில் திடீர் திருப்பம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதியால் கர்ப்பமாகியுள்ளதாக கூறும் சம்பவம் மிக விரைவில் நடைபெற இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
குறித்த சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா நிஜத்தில் கர்ப்பமாக இருந்து வருகின்றார். இருப்பனும் நெகட்டிவ் ரோலை மக்கள் வெறுத்தாலும் அதனை தொடர்ந்து செய்து வருகின்றார்.
அப்படி தற்போது அவரால் ஒரு பரபரப்பான டுவிஸ்ட் வரப்போவதாக தெரிகிறது. காரணம் என்னவெனில், தெலுங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மாவில் வெண்பா கதாபாத்திரம் பாரதியின் DNA Sample வைத்து கர்ப்பமாகி விடுகிறார்.
இதற்கு இடையில் தன்னையும் கண்ணம்மாவையும் பிரித்தது வெண்பா தான் என்ற உண்மையை அறிந்த பாரதி அவரிடம் சண்டை போடுவதற்கு செல்ல, அப்போது வெண்பா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறுவது போல் காட்சிகள் அமைந்துள்ளதாம்.
இதனால் குறித்த காட்சி தமிழிலும் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், ரசிகர்கள் அதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.