இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அஞ்சலிக்கு ஏற்பட்ட சோகம்: பாரதி கண்ணம்மாவின் திடீர் திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது. பல திருப்பங்களுடன் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இந்த சீரியலில் தற்போது ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆம் குறித்த சீரியலில் பிரசவ நேரத்தை நெருங்கும் அஞ்சலிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கண்ணம்மாவைப் போன்று இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே நெஞ்சு வலி பிரச்சனையால் அவதிப்படும் அஞ்சலி பிழைக்கக்கூடாது என்னும் நோக்கத்தோடு வெண்பா, பாரதி கொடுத்ததை போல மருந்தை மாற்றி கொடுத்து அதையும் அஞ்சலி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிர் பிழைக்க இருந்த சிறிதளவு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுமோ என்ற நிலை ஏற்படவுள்ளது.
மேலும் சுமுகமாக பிரசவமடைந்த அஞ்சலி பிறகு நெஞ்சுவலியால் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், என்னவாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆனால் அஞ்சலி இறந்துவிட்டாரா என்ற எண்ணம் தோன்றுகின்றது. ஏனெனில் கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா கையில் இருக்கும் குழந்தைகளுக்கு கீழ் மாலை ஒன்று தெரிகின்றது. இதிலிருந்து அஞ்சலி பிரசவத்திற்கு பின்பு இறந்துவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது அஞ்சலி திருந்தி நல்லவராக இருக்கும் நிலையில், ரசிகர்கள் அஞ்சலி இறக்கக்கூடாது என்று கூறிவருகின்றனர்.
