லஷ்மி மூலம் அம்பலமான அடுத்த உண்மை! பரபரப்பான பாரதி கண்ணம்மா ப்ரொமோ
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு ஹேமா குறித்த உண்மைகள் தெரியவந்துள்ள நிலையில், தற்போது பாரதியிடம் லட்சுமியும் ஒரு உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
கடந்த வாரம் ஹேமா, லெஷ்மி பிறந்தநாளைக் கொண்டாடி போது ஹேமா கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றுதான் என்ற உண்மை பாரதிக்கு தெரியவந்துள்ளது.
லஷ்மி உடைத்த உண்மை
இந்நிலையில் இந்த வாரம் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் லெஷ்மி தனது பள்ளியில் இருக்கும் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பிற்கு பாரதியை அழைக்கின்றார்.
ஆனால் பாரதி அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, உன்னோட அப்பா அம்மா தான் கலந்து கொள்ள வேண்டும்... மற்றவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.
அப்போது லெஷ்மி நீங்கள் தான் எனது அப்பா என்று தனக்கு ஏற்கனவே தெரியும் என்ற உண்மையைக் கூறி பாரதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, பாரதியை கெஞ்சுகின்றார். ஆனால் பாரதியோ எதையும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்.