மீண்டும் பிரச்சினையை கிளப்பிய வெண்பா! பாரதி கண்ணம்மாவில் அதிரடி திருப்பம்! ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்
பாரதி கண்ணம்மா சீரியலில் உண்மையை அறிந்த பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஒன்றுசேர இருந்த நேரத்தில் வெண்பா மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வருடக்கணக்கில் ரசிகர்கள் எதிர்பார்த்த சம்பவம் தற்போது நிகழ்ந்து வருகின்றது.
குடும்பத்தினர் எவ்வளவோ கூறியும் கேட்காத பாரதி இறுதியில் யாருக்கும் தெரியாமல் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்கு லெஷ்மி மற்றும் ஹேமா ரத்தமாதிரிகளை கொடுத்து உண்மையை அறிந்து கொண்டார்.
பின்பு கண்ணம்மாவிடம் வந்து மன்னிப்பு கேட்டு கதறியுள்ளார். இதனை அவதானித்த வெண்பா சுதாரித்துக் கொண்டு மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
கோபத்தில் கண்ணம்மா
பாரதி கண்ணம்மாவிடம் வந்து சேர்ந்து வாழலாம் என கூற, இடையில் வரும் வெண்பா... பாரதி இந்த DNA ரிப்போர்ட்டில் பிரச்சனை இருக்கிறது என்றும், உனக்கு ஏற்கனவே... இரண்டு முறை பெர்டிலிட்டி டெஸ்ட் எடுத்த போது, குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பே இல்லை என ரிப்போர்ட் வந்தது. அப்படி இருக்க இந்த இரு குழந்தையும் உனக்கு பிறந்ததாக இருக்கும் என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
வெண்பா கேட்கும் கேள்வி நியாயம் தானே... என கண்ணம்மாவும் கேட்க... மீண்டும் பாரதி மனதில் சந்தேகம் குடிகொள்ளுமா? அல்லது வெண்பாவின் சுய ரூபத்தை புரிந்து கொண்டு கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வாரா? என்ற கேள்வியுடன் அடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.