கண்ணம்மா கழுத்தில் விழுந்த மாலை! விரைவில் திருமணம்? எதிர்பார்ப்பில் மக்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீசன் 2ல் பாரதி பரிகாரம் செய்த பின்பு அவர் ஆற்றில் வீசிய மாலை கண்ணம்மாவின் கழுத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
பாரதி கண்ணம்மா சீசன் 2
பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் குறித்த சீரியல் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது.
இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில், ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த வினுஷாவே நடித்து வருகின்றார்.
பாரதியாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிப்பு நடித்து வருகின்றார். அவரது தாயாக முதல் பாகத்தில் நடித்த சௌந்தர்யாவே நடித்து வருகின்றார். ஆனால் கணவரை இழந்த பெண்ணாக நடித்து வருகின்றார்.
கண்ணம்மா சித்ராவாக மாற்றம்
குறித்த சீரியலில் பாரதியாக இருக்கும் நடிகர் சிப்பு ஊதாரியாக இருந்து வருகின்றார். மற்றொரு புறம் சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் வினுஷா சிறைக்கு சென்று விடுதலை ஆகி வெளியே வந்துடன், உறவினர்களால் திருடி என்று பட்டம் கட்டி ஊரைவிட்டு விரட்டப்படுகின்றார்.
உறவினர்களால் அடித்து விரட்டப்பட்ட சித்ரா, பேருந்தில் அமர்ந்து செல்கையில், கண்ணம்மாவின் அறிமுகம் கிடைக்கின்றது. அத்தருணத்தில் சித்ராவைக் கொலை செய்ய வந்த ரவுடிகள் கண்ணம்மாவைக் கொலை செய்ததால், தனது பெயரை கண்ணம்மாவாக மாற்றி அவர்களின் வீட்டிற்கே சித்ரா செல்கின்றார்.
பாரதியை திருமணம் செய்வாரா?
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில், எப்பொழுதும் மோதிக்கொண்டிருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் விரைவில் திருமணம் ஆக உள்ளது.
அதாவது பாரதி பரிகாரம் செய்து ஆற்றில் விட்ட மாலை, கண்ணம்மாவின் கழுத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் இவர்களினன் திருமணம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.