இறுதி கட்டத்தை நோக்கி பாரதி கண்ணம்மா! பாரதியை காப்பாற்ற மறுத்த கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் விபத்தில் சிக்கிய பாரதிக்கு பழைய வாழ்க்கை அனைத்தும் மறந்துபோன நிலையில், அவரைக் குணப்படுத்த கண்ணம்மா மறுப்பு தெரிவித்து கிளம்பிய ப்ரொமோ காட்சி வைரலாகி வருகின்றது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்ற கண்ணம்மாவைத் தேடி பாரதியும் கிராமத்திற்கு சென்று தங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குஸ்தி போட்டியில் பாரதி கலந்து கொண்டு வெற்றிபெற்ற நிலையில், அவரிடம் தோற்றுப்போன வில்லன் கம்பியால் அவரை தாக்கியுள்ளார்.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்த பாரதி பழைய வாழ்க்கையும், குடும்ப நபர்கள் அனைவரையும் மறந்துள்ளார்.
பாரதியை குணப்படுத்த மறுத்த கண்ணம்மா
ஆனால் பாரதி மயக்கத்தில் கூட கண்ணம்மாவின் பெயரை முறுமுறுத்துக்கொண்டிருந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் பாரதிக்கு கண்ணம்மாவையே அடையாளம் தெரியவில்லை என்று கூறியதால் அனைவரும் அதிர்ச்சியில் காணப்பட்டனர். மருத்துவர் கண்ணம்மா அருகே இருந்து கவனித்துக்கொண்டால் பாரதி சீக்கிரம் குணமாகிவிடுவார் என்று கூறினார்.
இதற்கு கண்ணம்மா மறுப்பு தெரிவித்து மருத்துவமனையை விட்டு கிளம்பியுள்ளார்.