தற்கொலைக்கு முயன்ற ஹேமா! நான் தான் அப்பா என்று கதறிய பாரதி: கண்கலங்க வைத்த ப்ரொமோ
பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த வாரம் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போட் உண்மை பாரதிக்கு தெரியவந்த நிலையில், மற்றொரு புறம் ஹேமா அப்பா யார் என்று தெரிந்து கொள்ள தற்கொலை வரை சென்றுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வருடக்கணக்கில் ரசிகர்கள் எதிர்பார்த்த சம்பவம் தற்போது நிகழ்ந்து வருகின்றது.
குடும்பத்தினர் எவ்வளவோ கூறியும் கேட்காத பாரதி இறுதியில் யாருக்கும் தெரியாமல் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்கு லெஷ்மி மற்றும் ஹேமா ரத்தமாதிரிகளைக் கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்த்த ரிப்போட் கடந்த வாரம் பாரதிக்கு தெரியவந்த ப்ரொமோ காட்சி வெளியானது. பின்பு பாரதி கதறி அழுது தவறை நினைத்து வருந்தினார்.
தற்கொலைக்கு முயன்ற ஹேமா
இந்நிலையில் வெண்பாவின் ரவுடிகளால் கடத்தப்பட்ட ஹேமா இறுதியில் கண்ணம்மாவால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது தந்தை யார் என்று தெரிந்து கொள்ள தற்கொலை வரை சென்றுள்ளார் ஹேமா.
அனைவரும் அதிர்ச்சியிலும், அழுகையிலும் ஹேமாவை அழைத்துக் கொண்டிருந்த நிலையில், பாரதி உள்ளே எண்ட்ரியானார். நான் தான் உனது அப்பா... கண்ணம்மா எனது மனைவி.... லெஷ்மி, நீயும் எங்களுடைய மகள் என்ற உண்மையை உடைத்துள்ளார்.
இதன் நடுவே நின்று ஹேமாவை மகிழ்ச்சியாக ரசித்துக் கொண்டிருந்த வெண்பா, பயங்கர ஷாக் ஆகியுள்ளார்.