பாரதி கண்ணம்மாவில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி: பிரபல ரிவி வெளியிட்ட புகைப்படம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாரதி-கண்ணம்மா இருவரும் இணைவார்களா என்பது ஒருபுறம் பெரிய கேள்வியாக இருந்தாலும் மறுபுறம் பாரதி அமெரிக்கா செல்வாரா என்பது இன்னொரு கேள்வியாக இருந்த நிலையில் ஹேமா மருத்துவமனையில் சிகிச்சையில் காணப்படுகின்றார்.
ஹேமாவைக் காப்பாற்ற கண்ணம்மா வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால், பாரதி கண்ணம்மாவை அழைத்து வருகின்றார். வரும் வழியில் சைக்கிள் ஒன்றில் மோதிவிடும் பாரதிக்கு, கண்ணம்மா சமாதானம் செய்கின்றார்.
இதற்கு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு பிரபல ரிவி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு மேலும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அது தொடர்பாக வெளியான புகைப்படத்தில் பாரதி, கண்ணம்மா மற்றும் அவர்களின் இரு மகள்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதனை கண்ட ரசிகர்கள் இந்த நிகழ்வு எப்போது நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிலரோ இது கனவாக இருக்கலாம் என்றும் சிலர் இது நிஜமாகத் தான் இருக்கும் என்று தங்களது கருத்தினை வெளியிட்டுள்ளனர்.