பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பொண்ணு ஹேமாவா இது? சுட்டிப்பையன் கண்ணனுடன் போட்ட க்யூட் டான்ஸ்!
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மகளாக வரும் சிறுமி ஹேமா, தாலாட்டு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக வரும் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து க்யூட் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர்.
சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டியால் அவ்வப்போது புதுப் புது சீரியல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சன் டிவி ‘தாலாட்டு’ எனும் புதிய சீரியலை சமீபத்தில் ஒளிபரப்ப துவங்கியுள்ளது.
அம்மாவின் பாசம் ஹீரோவுக்கு கிடைக்குமா என்ற கதைக்களத்தை கொண்ட இந்த சீரியலில், குழந்தை நட்சத்திரமாக ‘கண்ணன்’ என்ற சிறுவன் நடித்து வருகிறான்.
இந்த சிறுவன் சீரியலில் நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய டப்ஷ் மேஷ் செய்து வருகிறார். இதே போல் பாரதி கண்ணம்மா சீரியலில் தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி வரும் ஹேமாவும் அவ்வப்போது டப்ஷ் மேஷ் செய்து வருகிறார். இந்த இரு சிறார்களும் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.