உயிருக்கு போராடும் லெஷ்மி! பாரதி கண்ணம்மா சீரியலில் அரங்கேறிய ஷாக்
பாரதி கண்ணம்மா தொடரின் தற்போதைய ப்ரோமோக்கள் மற்றும் காட்சிகள், ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சென்று கொண்டிருக்கிறது.
பாரதி தான் தன்னுடைய தந்தை என்பதை தெரிந்து கொண்ட லட்சுமி, தந்தையுடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
குழந்தைகளுடன் டூருக்கு சென்ற பாரதி
பாரதி, கண்ணம்மா, குழந்தைகள் இருவரும் இணைந்து பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றுள்ளனர். ஏற்கனவே லெஷ்மிக்கு பாரதி தனது தந்தை என்று தெரிந்த நிலையில், அவர்களை சேர்த்து வைக்க அதிகமான ப்ளானை போட்டு வருகின்றார்.
இதனை பேருந்து செல்லும் போதே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார். பாரதி கண்ணம்மா இருவரையும் சேர்த்து உட்கார வைக்க லட்சுமி, ஹோமாவுடன் வந்து அமர்ந்து கொள்ள பாரதி பக்கம் இருக்கும் இருக்கையில் உட்கார கோருகின்றார்.
லட்சுமி கூறியதைக் கேட்டு தயக்கத்தில் நிற்கும் கண்ணம்மா, திடீரென வண்டி பிரேக் பிடிக்க பாரதி மீது விழுகின்றார். இருவரின் ரொமான்ஸ் காட்சியை பார்த்த ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்து வருகின்றனர்.


விபத்தில் சிக்கிய லெஷ்மி
இந்நிலையில் டூர் சென்ற இடத்தில் லெஷ்மி விபத்தில் சிக்கிய நிலையில், பாரதி ஓடிச்சென்று தூக்கி வருகின்றார்.
பின்பு லெட்சுமியை கண்விழிக்க செய்துள்ள காட்சி ரசிகர்களை எமோஷ்னலில் ஆழ்த்தியுள்ளது.