நீதிமன்றத்தில் பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா: புதிய கண்ணம்மா வெளியிட்ட பரபரப்பான காட்சி
பாரதி கண்ணம்மா சீரியலில் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற பாரதியினை வாக்குவாதத்தின் போது கண்ணம்மா கத்தியால் குத்துவது போன்ற காட்சியினை கண்ணம்மாவாக களமிறங்கிய புது நடிகை வினுஷா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்ட நிலையில், இந்த சீரியலில் முதலில் கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி விலகிவிட்டார்.
இந்நிலையில் புதிய நடிகை வினுஷா என்பவர் கண்ணம்மாவை போன்று நடித்து அசத்தி வருகின்றார். இதில் கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு பாரதி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறுகின்றது.
இந்த காட்சியினை நடிகை வினுஷா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதில் கண்ணம்மாவினை நடத்தையினை மறுபடியும் தவறாக கூறிய பாரதியினை கண்ணம்மா கத்தியால் குத்துவது போன்று காட்டப்பட்டுள்ளது.
ஆனால் பிரபல ரிவி தற்போது வெளியிட்டுள்ள ப்ரொமோ காட்சியில் ஜெயிலில் இருக்கும் வெண்பா மறுபடியும் சூழ்ச்சிசெய்த நிலையில், பாரதி எப்படி சந்தோஷமாக இருப்பான் என்ற அவரது வீட்டை அதிர வைக்க வேண்டும் என்று அஞ்சலியை வெண்பா ஆழ் வைத்து கடத்தியுள்ளதாக முடிக்கப்பட்டுள்ளது.