ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திய பாரதி கண்ணம்மா சீரியல்: அப்படியென்ன தான் நடந்தது?
பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த ப்ரொமோ காட்சி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.
ஆம் மாமனார் மாரடைப்பினால் மருத்துவமனையில் உயிருக்கு போராடுவது போன்றும், இதனால் கண்ணம்மா மருத்துவமனைக்கு வந்து பாரதியுடன் நிற்பதும் காட்டப்பட்டது.
அதுமட்டுமின்றி இருவரிடமும் சத்தியமும் கேட்டார் உயிருக்கு போராடிய மாமனார். ஆனால் தற்போது அவ்வாறு உயிருக்கு போராடிய மாமனார் முட்டை போண்டா சாப்பிட்டு பாரதியிடம் மாட்டிக்கொள்கின்றார்.
மாமனார் மட்டுமின்றி குடும்பமே முட்டை போண்டா சாப்பிட்டு மாட்டிக்கொண்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு தற்போதும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காட்சியினை அவதானித்த ரசிகர்கள் இயக்குனரை சரமாரியாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.