வெண்பாவை திருமணம் செய்யப்போகிறாரா பாரதி? பிரபல சீரியலில் திடீர் திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வெண்பாவை திருமணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களின் வரவேற்புகளை பெற்று தமிழ் சீரியல்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் பாரதி கண்ணம்மா இல்லதரசிகளை அதிகம் கவர்ந்து வருகின்றது.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த சில தினங்களாக பாசப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ஹேமா தனக்கு பிறந்த குழந்தை என்று கண்ணம்மா, பாரதியிடம் கூட முற்பட பாரதியோ இது எல்லாம் நடிப்பு என்று அவரை உதாசீனப்படுத்துகிறார்.
மறுபக்கத்தில் பாரதி தான் லட்சுமியின் அப்பா என்று கூறும் நிலையில், அவர் வருண் புகைப்படத்தினை எடுத்து லெட்சுமியிடம் காட்டியுள்ளதோடு, வருண் பெயரைக் கூறி பாரதி மிரட்டவும் செய்கின்றார். இந்த திட்டத்தை பாரதிக்கு சொல்லிக்கொடுத்தது வெண்பா தான்.
இந்த உண்மைகள் எப்பொழுது வெளிச்சத்திற்கு வரும் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது பாரதி, வெண்பாவை திருமணம் செய்து கொள்ள போவது போல ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
திருமணம் செய்து கொள்வதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ உண்மை இல்லை என்றாலும் பாரதியின் இந்த நடவடிக்கையால் இறுதியில் வெண்பா தான் அவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று ரசிகர்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.