வீட்டை காலி செய்த கண்ணம்மா! கதறியழுது தவித்த பாரதியின் பரபரப்பு காட்சி
பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்துள்ள நிலையில், கண்ணம்மாவை அழைத்து வர வீட்டிற்கு சென்ற பாரதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வருடக்கணக்கில் ரசிகர்கள் எதிர்பார்த்த சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
குடும்பத்தினர் எவ்வளவோ கூறியும் கேட்காத பாரதி இறுதியில் யாருக்கும் தெரியாமல் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்கு லெஷ்மி மற்றும் ஹேமா ரத்தமாதிரிகளை கொடுத்து உண்மையை அறிந்து கொண்டார்.
பின்பு கண்ணம்மாவிடம் வந்து மன்னிப்பு கேட்டு கதறிய நிலையில், கண்ணம்மா தான் இத்தனை ஆண்டுகளாக பட்ட கஷ்டத்தினை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
பிரேமாவும் தனது அம்மாவை அவ்வாறு நீங்கள் பேசியது தவறு தானே? என்றும் நான் தனது அம்மாவுடன் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
கண் காணாத ஊருக்கு சென்ற ஹேமா
கண்ணம்மாவிடம் ஹேமா லட்சுமி இரண்டு பேரும் உன்னை தவறாக பேசியவர்கள் யாரும் நமக்கு வேண்டாம்... நாம் யாரும் கண்டுபிடிக்க முடியாத வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடலாம் என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்ட கண்ணம்மா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்கின்றார். மற்றொரு புறம் பாரதி கண்ணம்மாவை எப்படியாவது இன்று அழைத்து வந்துவிடுவேன் என்று கூறி, கண்ணம்மாவின் வீட்டிற்கு வருகின்றார். அப்பொழுது கண்ணம்மா வீட்டை விட்டு சென்றதை அறிந்த பாரதி கதறி அழுதுள்ளார்.