பாரதி கண்ணம்மாவை சந்தித்த தருணம்! கண்ணம்மாவின் கன்னத்தில் இப்படியா அடிப்பாரு?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீசன் 2ல் கண்ணம்மாவை பாரதி பளார் என கன்னத்தில் அறைந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீசன் 2
பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் குறித்த சீரியல் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது.
இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில், ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த வினுஷாவே நடித்து வருகின்றார்.
பாரதியாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிப்பு நடித்து வருகின்றார். அவரது தாயாக முதல் பாகத்தில் நடித்த சௌந்தர்யாவே நடித்து வருகின்றார். ஆனால் கணவரை இழந்த பெண்ணாக நடித்து வருகின்றார்.
கண்ணம்மா சித்ராவாக மாற்றம்
குறித்த சீரியலில் பாரதியாக இருக்கும் நடிகர் சிப்பு ஊதாரியாக இருந்து வருகின்றார். மற்றொரு புறம் சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் வினுஷா சிறைக்கு சென்று விடுதலை ஆகி வெளியே வந்துடன், உறவினர்களால் திருடி என்று பட்டம் கட்டி ஊரைவிட்டு விரட்டப்படுகின்றார்.
உறவினர்களால் அடித்து விரட்டப்பட்ட சித்ரா, பேருந்தில் அமர்ந்து செல்கையில், கண்ணம்மாவின் அறிமுகம் கிடைக்கின்றது. அத்தருணத்தில் சித்ராவைக் கொலை செய்ய வந்த ரவுடிகள் கண்ணம்மாவைக் கொலை செய்ததால், தனது பெயரை கண்ணம்மாவாக மாற்றி அவர்களின் வீட்டிற்கே சித்ரா செல்கின்றார்.
கண்ணம்மா பாரதியை சந்தித்த தருணம்
இந்நிலையில் பாரதியும் கண்ணம்மாவின் முதல் சந்திப்பில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் கண்ணம்மாவின் செயலால் பாரதி பெண்வீட்டார் முன்பு அசிங்கப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் கண்ணம்மாவை பளார் என அறைந்துள்ள நிலையில், கண்ணம்மா தன் முன் நிற்கும் பாரதியை அறியாமல் அவருக்கே போன் செய்கின்றார்.
அப்போது அதிர்ச்சியடைந்த கண்ணம்மாவிடம் பாரதி நான் தான் என்று கூறுகின்றார்.