பாரதி பாஸ்கரின் தற்போதைய உடல்நிலை? வெளியான அதிமுக்கிய தகவல்
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய நகைச்சுவை பேச்சால் உலகத் தமிழர்களை கட்டிப்போட்டவர் பாரதி பாஸ்கர்.
கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்து வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், இன்னும் ஒரு வாரம் வரை அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.