கல்யாணம் பண்ணிக்கலாமா? பூர்ணிமாவிடம் மனதை பறிகொடுத்த பாக்யராஜ்
நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா காதல் மற்றும் திருமண கதை மிகவும் சுவராசியமானது. இவர்கள் இருவரும் தற்போது பலருக்கும் ஒரு உதாரணமாக வாழ்ந்து வரும் ஒரு பிரபலமான தம்பதிகள்.
இயக்குனர் பாக்யராஜ்
இயக்குனர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரே பிரபலம் கே.பாக்யராஜ் தான்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் தனது திரைப்பட கலையை கற்றுக்கொண்டார்.
நடிகை பூர்ணிமா
தமிழ் சினிமாவில் 80களில் வலம்வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இவர் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இவ்வாறு பல திரைப்படத்தில் நடித்து வந்த நடிகை பூர்ணிமாவிற்கு காதல் ஏற்பட்டது என்று தெரிந்துக்கொள்வோம்.
இயக்குனர் பாக்யராஜ் - நடிகை பூர்ணிமா காதல் கதை
பயணங்கள் முடிவதில்லை படத்திற்குப் பின் மலையாளப்படத்தில் நடிப்பதில் அர்வம் காட்டினார். அந்தவேளையில் மலையாளப் படம் ஒன்றுக்காக பாரீஸ் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு செல்வதற்கு முன்பாக தனது அம்மாவிடம் ஒரு சில நாட்கள் தங்கி செல்லலாம் என்று, மும்பை வந்துள்ளார். அப்போது தான் பாக்யராஜ் அங்கு ஷூட்டிங்கில் வந்திருப்பதாக பூர்ணிமாக்கு தகவல் கிடைத்தது.
முன்போ பாக்யராஜூடன் பழக்கம் இருந்ததால், உடனே தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ‘என்ன சார்.. எங்க ஊருக்கு வந்திருக்கீங்க.. வீட்டுக்கு சாப்பிட வாங்க..’ என்று கூறியுள்ளார்.
அடுத்த நாள் பாக்யராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அன்றைய தினம் நவராத்திர என்பதால், வீட்டில் பழங்கள் மட்டுமே இருந்துள்ளது. அதை சாப்பிட்டுக்கொண்டே கதைத்துள்ளனர்.
பின் ‘பாரீஸ் போய்டு வந்து.. எனக்கு கால் பண்ணுங்க’ என்று கூறி, அங்கிருந்து பாக்கியராஜ் சென்றுள்ளார்.
பாரீஸ் இருந்து இருமுறை பாக்யராஜை தொடர்பு கொண்டும் அவரால் பேச முடியவில்லை. ஆகவே இந்தியா வந்ததும் கதைக்கலாம் என்று பூர்ணிமா நினைத்துள்ளார்.
பாரீஸில் இருந்து விமானநிலையத்தில் இறங்கியதும், நீங்க இந்த காரை எடுத்துட்டு போங்க.. நான் பூர்ணிமா கூட கொஞ்சம் பேசணும்’ என்று அவரது அம்மாவிடம் கூறி, அவரை அனுப்பி வைத்துள்ளார்.
பின் பூர்ணிமாவை கடற்கரைக்கு தனியாக அழைத்து சென்று ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு பூர்ணிமா ‘அப்பாவிடம் கேளுங்க..’ என்று கூற, வீட்டில் எல்லோரும் சம்பந்தம் கூறி விட்டனர். நீங்கள் முதல் பதில் சொல்லுங்க என்று கூறியுள்ளார்.
எனக்கும் சம்பந்தம் என்று கூற இருவரும் திருமணம் செய்துக்கொண்டு தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.