குழந்தைகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் உணவுகள்: பெற்றோர்களே உஷார்
மனிதர்கள் உயிர்வாழ உணவு அடிப்படை தேவையாக இருக்கும் நிலையில், சில தருணங்களில் அந்த உணவே ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
சாப்பிடக் கூடாத சில ஆபத்துள்ள உணவுகள்
பச்சை பால், சமைக்காத முட்டைகள், பதப்படுத்தப்படாத பழச்சாறு, சமைக்கப்படாத மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கதப்படுத்தப்பட்டுள் ளஉணவுகள் என்பதே.
குழந்தைகளுக்கு அதிக ஆபத்துள்ள உணவுகள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும், 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கும் தேன் கொடுப்பது ஆபத்தாகும்.
பொட்டுலிசம் என்ற உயர் ஆபத்து காரணமாக, குழந்தைகளுக்கு அதிக ஆபத்துள்ள உணவுகளின் பட்டியலில் தேன் இடம் பெறுகிறது.
இந்தியாவில் குழந்தை பிறந்ததுமே நாக்கில் தேன் தடவும் பழக்கம் இருப்பதால் இந்த விஷயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.
கர்ப்பிணிப் பெண்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், முதியவர்கள், சிறார்கள், குழந்தைகளுக்கு, சில உணவுகள் பிரச்சனையாக மாறலாம்.
சமைக்கப்படாத கீரைகள், காளான் போன்றவை, முளைக்கட்டிய பயிர் வகைகள்,வேகவைக்கப்படாத முட்டைகள், பாலாடைக்கட்டிகள், குளிரூட்டப்பட்ட கடல் உணவுகளை இந்தப் பிரிவினர் சாப்பிடக்கூடாது. இந்த உணவுகளில் லிஸ்டீரியா, சால்மோனெல்லா மற்றும் பிற பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
மேலும் இவர்கள் சுறா, வாள்மீன், கானாங்கெளுத்தி, டைல்ஃபிஷ் போன்ற அதிக அளவு பாதரசம் கொண்ட மீன்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் மூலமான மீன் சாப்பிடுவதால் பல நன்மைகளும் உள்ளதால், மீன் உண்பதை தவிர்க்காமல், கவனமாக சாப்பிட்டால் போதும்.
குழந்தைக்கு உணவோ அல்லது பால் உட்பட திரவ உணவுகள் எதை கொடுத்தாலும், இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக எஞ்சியிருக்கும் உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம். பொதுவாக குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுப்பதைவிட டம்ளர் மூலம் கொடுப்பது சிறந்தது.
குழந்தைகளுக்கு சில உணவுகள் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். கடினமான மிட்டாய், வேர்க்கடலை/கொட்டைகள், விதைகள், முழு திராட்சை, சமைக்காத கேரட், ஆப்பிள்கள், மீன் போன்றவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.