தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்ச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிலையின் மருத்துவ பயன்கள்
வெற்றிலையில் வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் தினமும் ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுட்டு வர உடல் இறுக்கம், குடல் புண்களை விரைவில் குணமடைய ஆரம்பிக்கும்.
வெற்றிலை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றலை கொண்டுள்ளதால் அதனை மென்று சாப்பிடுவது புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
வெற்றிலையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை இலகுவாக்கி மலம் கழிப்பதற்கு தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சிகைளகளுக்கும் வெற்றிலை சாறு சிறந்த மருந்தாக திகழ்கின்றது.
குடல் சுருக்கம், வயிறு வலி, பசியின்மை குடல் புழுக்களால் ஏற்படுகின்ற உபாதைகளுக்கும் வெற்றிலை சிறந்த தீர்வு கொடுக்கின்றது.
வெற்றிலை பச்சையாக மென்று சாப்பிடுவதால் மூல நோயின் தாக்கத்தால் ஆசன வாய்ப் பகுதியில் ஏற்படும் வலி, எரிச்சல் ஆகியவை போக்குவதுடன் வீக்கங்களையும் குறைக்கும். அதனை தொடர்ச்சியாக செய்து வந்தால் மூலநோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
வெற்றிலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால், தினமும் காலையில் ஒரு வெற்றிலை மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன் பூஞ்சை தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது.
தினமும் ஒரு வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மற்றும் வீக்கம் கணிசமாகக் குறைவதுடன் அழற்சிகளில் இருந்தும் உடலை பாதுகாக்கின்றது.
மேலும் வெற்றிலையானது வாய்ப் புண், பல் சொத்தை, போன்ற பிரச்சினைகளுக்கு தீ்ர்வு கொடுப்படுடன் பிளேக் நோய் தாக்கத்தில் இருந்தும் உமலை பாதுகாக்கின்றது.
இதில் ஆண்டி-ஆக்ஸிடண்ட் பண்புகள் அதிகமாக இருப்பதன் காரணமாக உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் மன அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன் வாய்நாற்றத்தை போக்குவதிலும் சிறப்பாக செயற்படுகின்றது. உடல் எடையை கட்டுக்குள் வைப்பதிலும் வெற்றிலை உதவுகின்றது.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் ஈறுகள் வலுப்பெருவதுடன் பல் வலி, ஈறுகளில் ஏறட்படுகின்ற ரத்த கசிவு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது. அது மட்டுமன்றி பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார்படுத்துகின்றது.
வெற்றிலையில் வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றும் ஆற்றல் அதிகமாக இருப்பதால் வாயு பிரச்சினையை போக்க உதவுகின்றது.
வெற்றிலையானது மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனை தினசரி சாப்பிடுவது அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |