காலையில் காஃபி குடிக்க சிறந்த நேரம் எது?
இன்று பெரும்பாலான நபர்களின் தவிர்க்க முடியாத பழக்கமாக காஃபி மற்றும் டீ மாறியுள்ளது. ஆம் காலையில் எழுந்தததும் இதனை அருந்திய பின்பே அன்றைய நாளை தொடங்குகின்றனர்.
ஆனால் சிலரால் டீ, காஃபி குடிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாமல் இருப்பதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.
தினமும் காபி அருந்துவதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும் அளவுக்கு அதிகமாக குடித்தால் அது பல தீங்கு விளைவிக்குமாம்.
காஃபி குடித்தால் என்ன நன்மை?
காஃபி, டீ அருந்துவது ஆற்றல் அளவை அதிகரிப்பதுடன், விழிப்புணர்வையும் அதிகரிக்கின்றது.
அறிவாற்றல் மற்றும் உடல் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துகின்றது. ஆனால் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு காரணம் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருக்கலாம்.
எந்த நேரத்தில் காஃபி குடிக்கலாம்?
காலை எழுந்தவுடன் காஃபி குடிப்பதை வழக்கமாக வைக்க வேண்டும். காலை எழுந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்த பின்று பருகலாம்.
காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பின்னே தேநீர் அருந்த வேண்டும்.
முடிந்தால் காலை உணவை முடித்துவிட்ட பின்பு கூட தேநீர் அருந்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இவை நாள் முழுவதும் உங்கள் ஆற்றல் பயன்பாட்டிற்கு உங்களை தயார் படுத்துமாம்.
காஃபின் வயிற்றிலுள்ள அமிலம் மற்றும் பித்த உற்பத்தியை அதிகரிப்பதுடன், அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கவும், பெருங்குடல் இயக்கத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.
இதே போன்று மதியம் 3 மணிக்கு பின்பு காஃபி குடிக்கக்கூடாதாம். தூக்க சுழற்றி, நிம்மதியான தூக்கத்தை பாதிக்குமாம். மோசமான தூக்க முறைகள் அடுத்த நாளில் உங்களது ஆற்றலை அதிகமாக பாதிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |