Medicine Uses: எந்தெந்த பிரச்சனைக்கு என்ன மாத்திரை போடனும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இந்தியாவில் மக்கள் பயன்படுத்தி வரும் மாத்திரைகளைக் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாத்திரைகள்
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தனது உடல்நல பிரச்சனைக்கு மெடிக்கலில் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு தனது அன்றாட வேலையினை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.
ஆனால் இவை உடம்பிற்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் தற்காலிக உடல்நல ஆரோக்கியத்தை பார்த்துக் கொண்டு இயல்வு வாழ்க்கைக்கு செல்கின்றனர்.

பிற்காலத்தில் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொள்ளாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். தவைவலி, காய்ச்சல், அலர்ஜி என இவற்றிக்கு தேவையான மருந்துகளான பாராசிட்டமல், சிட்ரிசின், அசித்ரோமைசின், அமாக்ஸிலின் என பல வகையான மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.
தற்போது அதிகமாக மக்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் குறித்தும், அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் சற்று தெரிந்து கொள்ளலாம்.
பாராசிட்டமால் (Paracetamol)
பெரும்பாலான நபர்கள் காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தும் முக்கியமான மாத்திரை பாராசிட்டமால் ஆகும்.

அசித்ரோமைசின் (Azithromycin)
அசித்ரோமைசின் மாத்திரையானது ஆன்டி பயாட்டிக் மாத்திரை ஆகும். இதனை தொண்டை பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை மற்றும் தோல் இன்பெக்ஷன் இவற்றிற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பேண்டோப்ராசோல் (Pantoprazole)
இந்த மாத்திரையானது வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனை குறைப்பதற்கு உதவி செய்கின்றது. மேலும் நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
சிட்ரசின் (Cetirizine)
இவை பொதுவான ஆன்டி அலர்ஜி மருந்து ஆகும். இந்த மாத்திரையினை தும்மல், மூக்கு ஒழுகுதல், அரிப்பு இவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.

மெட்ஃபோர்மின் (Metformin)
இந்த மாத்திரையானது நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றது.
அமாக்ஸிலின் (Amoxicillin)
ஆன்டி பயாட்டிக் மாத்திரையாக செயல்படும் இவை தொண்டையில் ஏற்படும் தொற்று, காதுகளில் ஏற்படும் தொற்று, சுவாச குழாயில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்கின்றது.
ஆஃப்லோஜாசின் (Ofloxacin)
இந்த ஆன்டி பயாட்டிக் மாத்திரையானது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, வயிறு மற்றும் கண்களில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய பயன்படுத்தப்படுகின்றது.
டாக்ஸிசைக்கிளின் (Doxycycline)
இதுவும் ஒரு ஆன்டி பயாட்டிக் மாத்திரை ஆகும். இவை முகப்பரு, நுரையீரல் தொற்று, டைபாய்டு காய்ச்சல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
ஐபுப்ரோஃபென் (Ibuprofen)
இந்த மாத்திரையானது வலி மற்றும் வீக்கம் இவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.

லெவோசிட்ரசின்(Levocetirizine)
அலர்ஜி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைக்கு இந்த மாத்திரையினை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
டாம்பெரிடோன்(Domperidone)
வாந்தியினை நிறுத்துவதற்கு இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
ரேப்ரசோல் (Rabeprazole)
அசிடிட்டி போன்ற பிரச்சனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய மாத்திரை ஆகும்.
ஒமோடிடின் (Omotidine)
வாயு மற்றும் வயிறு வலிக்காக எடுத்துக் கொள்ளவேண்டிய மாத்திரை
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |