கொடைக்கானல் மலையில் பேரழகியாய் ஜொலிக்கும் இயற்கை அழகி...பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது!
இந்தியாவில் இருக்கும் சுற்றுலா தலமான கொடைக்கானல் மலையின் அழகை இந்த பதிவின் மூலம் தெளிவாக விஷயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கொடைக்கானல்
கொடைக்கானல் மலையின் அழகை கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. மலைகளை முத்தமிட்டபடி செல்லும் மேகங்கள், அவ்வப்போது சாரல் மழை பச்சை பசேல் என்ற அழகிய இடம்.
இதை பார்க்கச் செல்லாதவர்கள் ஆசைப்படாதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. பெண்கள் உலகில் அழகானவர்கள் ஆனால் கொடைக்கானல் மலையின் அழகின் முன்னால் பெண்ணழகே தோற்றுப் போய் விடும்.
இங்கு சூரியனுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி தருகிறது இயற்கை. அவ்வப்போது சாரல் மழை, முத்தமிடும் மேகக்கூட்டங்கள். இதையெல்லாம் பார்த்து சூரியனே ஏங்குகிறது.
ஏப்ரலில் எப்படியாவது காப்பாற்று என்று ஏங்கிய செடிகளும், கொடிகளும், மழையின் மாயாஜாலத்தில் யானை பலத்துடன் துள்ளி குதித்தபடி நிற்கின்றன.
அருவிகளில் கொட்டும் நீர் மனதிற்கு இதமளிக்கும் இயற்கை காலநிலை இதுபோன்ற எல்லா வகையிலும் அழகை அள்ளித் தருகிறது. இதனாலேயே இந்த இடத்தை பார்க்க சுற்றுலாப்பயணிகள் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் குளுகுளு சீசன் தொடங்கிய நிலையில் உள்ளது. கோக்கர்ஸ் வாக் மோயர் பாயிண்ட், பில்லர் ராக், குணா குகை, பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களில், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையலாம்.