இந்தியாவில் நாம் பார்க்க மறந்த சொர்க்கம்! இனி இத மிஸ் பண்ணிடாதீங்க
இன்றைய கலியுகத்தில் இயற்கை என்பது நாளுக்கு நாள் அழிந்து கொண்டே செல்கின்றது.
இயற்கையை நன்கு பார்த்தால் அது நினைத்து பார்க்க முடியாத ஓர் மாயாஜால உலகமாக பார்க்கப்படுகின்றது.
இங்குள்ள பசுமையான புல்வெளிகள், வானத்தில் உயரமான மரங்கள், சலசலக்கும் ஆறுகள், சூரிய ஒளி படர்ந்த பின்னணிகள் அல்லது உருளும் மலைகள் இவை அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவதை விட மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றது.
அந்த வகையில் இந்தியாவிலுள்ள இடங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. குருடோங்மார் ஏரி - சிக்கிம்
பனிபாறைகளை பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கும் பயணிகளுக்கு இது சரியான இடமாக இருக்கும்.
தொடர்ந்து, திபெத்திய பௌத்தத்தின் நிறுவனர் - குரு ரின்போச்சியின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த அழகிய ஏரி பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.
இவ்வளவு சிறப்புக்கள் நிறைந்த இந்த இடத்தை வாழ்நாளில் ஒரு தடவை சரி சென்று பாருங்கள்.

2. பனி பள்ளத்தாக்கு - காஷ்மீர்
இந்தியாவில் இருக்கும் பயணிகள் அதிகமாக படையெடுக்கும் சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் திகதி வெளியாகபோகும் லியோ திரைப்படமும் இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டது.
மேலும் காரகோரம் மலைத்தொடருக்கும் பிர் பஞ்சால் மலைத்தொடருக்கும் இடையே ஆடம்பரமாக பரந்து விரிந்துள்ள காஷ்மீர் நித்திய அழகான இடமாகும்.

3. யும்தாங் பள்ளத்தாக்கு - சிக்கிம்
பொதுவாக இயற்கை விரும்பிகள் சுற்றுலா செல்லும் போது சுவாரஸ்யத்துடன் கூடிய அதிசயங்களை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அத்தகைய ஒரு அழகு யும்தாங் பள்ளத்தாக்கில் இருக்கின்றது.
அத்துடன் நதியின் அமைதியான அதிர்வு, முழு நிலப்பரப்பு முழுவதும் பதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பூக்கள், மற்றும் மலைகளின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகள் இங்கு அதிகமாக இருக்கின்றது.
இதன் காரணமாக இந்த இடத்தில் அதிகமான இந்திய திரைப்படங்கள் எடுக்கப்படுவதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுவும் நம் வாழ்க்கையில் புது விதமான அனுபவத்தை தரும் என சுற்றுலா பயணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |