இந்தியாவில் சொர்க்கத்தின் வாகையாக இருக்கும் சில இடங்கள்.. வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்க!
இன்றைய கலியுகத்தில் இயற்கை என்பது நாளுக்கு நாள் அழிந்து கொண்டே செல்கின்றது.
இயற்கையை நன்கு பார்த்தால் அது நினைத்து பார்க்க முடியாத ஓர் மாயாஜால உலகமாக பார்க்கப்படுகின்றது.
இங்குள்ள பசுமையான புல்வெளிகள், வானத்தில் உயரமான மரங்கள், சலசலக்கும் ஆறுகள், சூரிய ஒளி படர்ந்த பின்னணிகள் அல்லது உருளும் மலைகள் இவை அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவதை விட மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றது.
அந்த வகையில் இந்தியாவிலுள்ள இடங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவிலுள்ள சொர்க்கம்
1.பூக்களின் பள்ளத்தாக்கு - உத்தரகண்ட்
பொதுவாக நிலங்கள் காணமுடியாத மலர்கள் மாத்திரம் சூழந்திருக்கும் ஓர் அழகான நிலத்தை கற்பனை செய்ய முடியுமா? இந்த இடம் சொர்க்கம் அல்ல ஆனால் பார்ப்பதற்கு சொர்க்கம் போலவே இருக்கும்.
அத்துடன் பள்ளத்தாக்கு நந்தா தேவி உயிர்க்கோளத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட மருத்துவ மூலிகைகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களால் இந்த இடத்தில் காணப்படுகின்றன.
சுற்றுலா சென்று அன்றைய நாட்டுகளை சிறப்பாக கழிக்க வேண்டும் என்றால் இங்கு கண்டிப்பாக சென்று பாருங்கள். மன நிம்மதி கிடைக்கும்.
2. லோக்டக் ஏரி - மணிப்பூர்
இந்த இடம் வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகின்றது. அத்துடன் எவரும் கற்பனை செய்ய முடியாத அளவில் காணப்படும். இயற்கை ஆர்வலர்களுக்கு தனித்துவமான பயண அனுபவங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது உலகிலேயே ஒரே மிதக்கும் ஏரியாகும்.
தொடர்ந்து, இது இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும், இது மிதக்கும் பும்டிஸ்க்கு பிரபலமானது. ஆகையால் இயற்கை விரும்பிகள் இங்கு அதிகமாக வருகை தருகின்றார்கள்.
அத்துடன் சுற்றுலா சென்று அங்கு நிறைய சவால்களை பார்க்க வேண்டும் என தற்கால இளைஞர்கள் சிந்திப்பார்கள். இவர்கள் இது போன்ற இடங்களுக்கு செல்லாம்.
3. லோனார் ஏரி - மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த ஏரி லோனார் ஏரி மற்றும் லோனார் க்ரேட்டர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இது தான் உலகில் மிகப் பழமையான விண்கல் பள்ளத்தாக்கு. சராசரியாக 148 மீட்டர் ஆழமும் கிட்டத்தட்ட 1832 மீட்டர் நீளமும் கொண்டது. இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஏரியை உங்கள் வெற்று கண்களால் காணமுடியாது.
அந்தளவு அற்புதமாக இருக்கும். இயற்கை இப்படி அமையபெறும் இந்த ஏரியை நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியில் பார்வையிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |