மலச்சிக்கலை சரி செய்யும் பானங்கள்...
பொதுவாக அனைவரும் முகம்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றுதான் மலச்சிக்கல் மற்றும் வாயுப் பிரச்சினை. அதன்படி உணவில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால், அது வாயு பிரச்சினையிலிருந்து விடுபடுவதோடு, வயிற்றிலுள்ள அழுக்குகளையும் சுத்தப்படுத்துகின்றது.
அந்த வகையில் பார்த்தால் காய்கறிகளில்தான் அதிகமான நார்ச்சத்து உள்ளது. பழங்கள் என்றுமே நம் உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது. அந்த வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 3 வகையான பழச்சாறுகள் பற்றி பார்ப்போம்.
image - Freepik
எலுமிச்சைச் சாறு - எலுமிச்சைச் சாற்றில் அதிகமாக விட்டமின் சி நிறைந்துள்ளது. இது அமிலத்தன்மையையும் நீக்கவல்லது. இது வயிற்றை சுத்தம் செய்யக்கூடியது. அதுமட்டுமின்றி பக்டீரியாக்களையும் அழிக்கும்.
image - The Ashcroft Family Table
அப்பிள் ஜூஸ் - அப்பிள் சாறானது குடல் நச்சுத்தன்மைக்கு மிகவும் நல்லது. வயிறு சுத்தமாக இல்லாவிட்டால் அப்பிள் ஜூஸ் மிகவும் நன்மையளிக்கும்.
image - Clean Eating Kitchen
காய்கறி சாறு - ப்ரோக்கோலி, கேரட், முட்டைக்கோஸ், பாகற்காய் போன்றவற்றை அரைத்து அதன் சாற்றை குடிக்கலாம். இது வயிற்றை சுத்தம் செய்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.