உதடு ரொம்ப கருப்பாக இருக்குதா? 7 நாட்களில் ஒளிரச் செய்யும் எளிய வழிகள் இதோ!
பொதுவாகவே ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவது இயல்பானது தான்.
அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதற்கு ஆண்களை விடவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது.பொதுவாகவே பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பாவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இன்னும் சொல்லப்போனால் லிப்ஸ் டிக் இல்லாமல் வெளியில் போக முடியாது என கூறும் அளவுக்கு இதன் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது.
மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு தகவல் குறிப்பிடுகின்றது. இவ்வாறு தொடர்சியாக லிப்ஸ் டிக் பாவிப்பதனால் உதடுகளுக்கு போதியளது ஆக்சிஜன் கிடைக்காமல் உதடுகள் கருப்பாக மாறிவிடுகின்றது.
இந்த பிரச்சினை பெண்களுக்கு லிப்ஸ் டிப் பாவிப்பதால் ஏற்படுகின்றது என்றால், ஆண்களுக்கு உதட்டை அடிக்கடி எச்சில் படுத்துவதால் ஏற்படுகின்றது. இருபாலாருக்கும் பொதுவான பிரச்சினையாக திகழும் இந்த உதட்டு கருமையை போக்க எளிமையான வீட்டு வைத்தியங்ககள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் மாஸ்க்
தக்காளி மற்றும் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவ வேண்டும்.
இதை வாரம் மூன்று முறை செய்து நல்ல மாற்றத்தை கொடுக்கும். மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அதனுடன் நிறத்தை அதிகரிக்க கூடிய எலுமிச்சை மற்றும் சுருக்கத்தை தடுக்க பயன்படும் தக்காளியை சேர்க்கும் போது மிகவும் சிறப்பாக செயல்பட்டு மென்மையான ரோஜா இதழ் போன்ற உதடுகள் கிடைக்கும்.
எலுமிச்சை மாஸ்க்
எலுமிச்சை மெலனின் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சிட்ரஸ் பழமாகும். ஒரு சிறிய கிண்ணத்தில், 1 1/2 தேக்கரண்டி புதிய எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி கிளிசரின் ஆகியவற்றை சேத்து ஒன்றாக கலக்க வேண்டும்.
படுக்கைக்கு செல்லும் முன்னர் கலவையை உங்கள் உதடுகளில் மெதுவாக தடவி மறுநாள் காலையில் உங்கள் உதடுகளை நன்றாக கழுவினால், உதடுகளின் கருமை விரைவில் நீங்கும்.
மாதுளை மாஸ்க்
மாதுளை சாறு சருமத்தின் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஒளிரச் செய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
1 தேக்கரண்டி மாதுளை விதைகள் 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி புதிய பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
அந்த கலவையை உதடுகளில் சுமார் மூன்று நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும், பின்னர் உங்கள் உதடுகளை குளிர்ந்த நீரில் கழுவவும். தினமும் இவ்வாறு செய்து வர நல்ல மாற்றம் தெரிவதை கண்கூடாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |