வெறும் வயிற்றில் இந்தப் பழங்களை எல்லாம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
நாம் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியமான நாளாக மாற்ற காலை உணவு மிக முக்கியமானதாகும். அதிலும் ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கும் நோக்கிலும் சரியான நேரமின்மையாலும் இன்று பலர் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள் இதனால் பல விளைவுகள் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.
பொதுவாகவே பழங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அதிகம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய சில பழங்கள் அதிக நன்மைகள் இருக்கிறதாம்.
காலையில் சாப்பிட வேண்டிய பழங்கள்
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ.பி.பி2, சி, பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளது. இந்த வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாழைப்பழத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் எனும் மா சத்து இயற்கை சக்கரை அளவை அதிகம் கொடுக்கும். மேலும், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தர்பூசணியில் அதிக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தை அதிகம் கொண்டிருக்கிறது.இந்த தர்பூசணியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் இதில் இருக்கும் லைகோபீன் அதிகம் உள்ளது இது ஆக்சிஜனேற்றியாக பயன்படுத்தப்பட்டு இதயம் மற்றும் தோலை பாதுகாக்கும்.
ஆப்பிள் சாப்பிடுவதால் இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆப்பிள் பழத்தில் பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த ஆப்பிளை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆப்பிளில் இருக்கும் பெக்டின் எனும் மூலப்பொருள் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மூளைச் செயல்பாட்டை புத்துணர்வாக மாற்றும்.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயற்பாடு சிறப்பாக இருக்கும். மேலும், நாவல் பழம் நினைவாற்றலை மேம்படுத்தவும், இரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |