குளிர்காலத்தில் முக்கியமாக சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
குளிர்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் விரைவில் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. நம் உடலில் உள்ள தசைவலி, பிடிப்புகள் மற்றும் தோல் பிரச்சினைகள் மோசமடையத் தொடங்குகின்றன.
இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு. நாம் நம் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்தப் பிரச்சனை தொடரும்.
உடலில் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இரத்த சோகை, சோர்வு, எரிச்சல், கைகளில் விறைப்பு, வாய் புண், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இறைச்சி, மீன், பருப்பு வகைகள், பீன்ஸ், சீஸ், மோர் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலை சூடாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பெரும்பாலான நோய்களை இருந்து நம்மை காக்கலாம். குளிர்காலத்தில் உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதே சமயம் அதன் பலன்களையும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து, புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் உள்ளன.
மேலும், பாதாம், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்ஹு சாப்பிடுவதால் உடல் காய்ச்சலில் இருந்து விலகி இருக்கவும் உதவுகிறது. உலர் பழங்கள் சாப்பிட சிறந்த அளவு சுமார் 30 கிராம்.