கெட்ட கொலஸ்ட்ராலை கடகடவென குறைக்க வேண்டுமா? இதை கட்டாயம் சாப்பிடுங்க
இயற்கையான வழியில் நமது உடம்பில் இருக்கும் LDL என்ற கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கெட்ட கொலஸ்ட்ரால்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகமாக இருந்தால் இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
Low-density lipoprotein cholesterol (LDL) என்பது கெட்ட கொலஸ்ட்ரால் எனவும், High-density lipoprotein cholesterol (HDL) என்பது நல்ல கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு HDL அளவு சீராக இருக்கும் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கச் செய்து, LDL அளவை குறைக்க உதவும் உணவினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்
சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் நட்ஸ் வகைகளில் வால்நட்ஸ் மற்றும் பாதாம் இவற்றினை எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நன்மை அளிப்பதுடன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றது. மேலும் உலர் பழங்கள் இவற்றினையும் தினசரி 6 முதல் 8 என்ற வகையில் சாப்பிடலாம்.

அதே போன்று கொழுப்பு சத்து அதிகமாக உள்ளவர்கள் துளசியை எடுத்துக் கொள்ளலாம். வளர்சிதை மாற்ற அழுத்தத்தினைக் குறைக்க உதவும் பண்புகள் துளசியில் உள்ள நிலையில், இவை எடையையும் கட்டுக்குள் வைக்கின்றது. தினமும் 5-6 இலைகளை கழுவி சாப்பிடவும்.

பெரியவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஓட்ஸ் கெட்ட கொழுப்பினைக் குறைக்கின்றது. கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஓட்ஸ் மிகச்சிறந்த உணவாக இருக்கின்றது. மேலும் வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் அளிப்பதால், உடல் எடையும் அதிகரிப்பதில்லை.

ராஜ்மா, கொண்டைக்கடலை, பயறு வகைகள், மசூர் பருப்பு போன்ற பருப்புகளில் தாவர புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள பொருளாக இருக்கின்றது. ஆதலால் இதனை எடையைக் குறைப்பதற்கு பயன்படுகின்றது.
பெர்ரி பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களில் ஆன்டிஆக்சிடெண்ட்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது.
கீரை வகைகளிலும் இதயத்தினை அழுத்தத்தை குறைக்கவும், ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |