ஆயுசு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் போதும்
காலையில் எழுந்ததும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் காலை உணவிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. ஆனால் புதிதாக ஆரம்பித்திருக்கும் அன்றைய தினம் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காலை உணவு முக்கியம் ஆகும்.
காலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவே உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அவ்வாறு நீங்கள் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவினைக் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிடலாம்?
செரிமான பிரச்சினையை சீக்கிரம் சரிசெய்யும் பப்பாளியை காலை வெறும்வயிற்றில் சாப்பிட்டலாம். அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதுடன், வைட்டமின் சி சத்தும் அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது.
வெறும் வயிற்றில் ஆரோக்கியமான ஜுஸ் குடித்து வந்தால் நச்சுக்கள் வெளியேறும். அதாவது காய்கறி ஜஸ் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளரி, கேரட், பீட்ரூட் போன்ற ஜுஸை எடுத்துக்கொள்ளலாம்.
காலை வெறும்வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் பருகுவதால் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் வாயு பிரச்சினைகளை குறைக்கலாம். மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடை இழப்பிற்கு பெரிதும் உதவி செய்கின்றது.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட வாழைப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாகவே இருக்கின்றது. வாழைப்பழத்தினை தினமும் காலை வெறும்வயிற்றில் சாப்பிட்டால் ஆற்றல் கிடைப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
இதே போன்று ஊற வைத்த அத்திப்பழம் மற்றும் காய்ந்த திரட்சை இவற்றினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினை நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிரச்சனைகளும் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |