வெங்கடேஷ் பட் ரெசிபி: புதுவிதமான வேர்க்கடலை பூண்டு பொடி மசாலா
வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. இது உடலில் நல்ல கொழுப்பை உருவாக்க உதவும்.
இந்த வேர்க்கடலையை வைத்து பல உணவுகளை நாம் செய்யலாம். ஆனால் இந்த பதிவில் வெங்கடேஷ் பட் ரெசிபியில் ஒரு முறை இப்படி செய்து கொஞ்சமாக நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை எண்ணெய் 2 ஸ்பூன்
- 150 கிராம் வேர்கடலை
- 50 கிராம் தேங்காய்
- 75 கிராம் பூண்டு
- 16 காஷ்மீரி வத்தல்
- 3 கை பொட்டுக்கடலை
- 1 ½ ஸ்பூன் சீரகம்
- 25 கிராம் புளி
- 1 ஸ்பூன் பெருங்காயம்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். அது பொன்னிறமாக வறுபட்டவுடன் இதில் தேங்காய், பூண்டு, வத்தல், பொட்டுக்கடலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சீரகம் சேர்த்து கிளரவும்.
தொடர்ந்து 1 கொத்து கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து பெருங்காயத்தூள் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். கடைசியாக புளி சேர்த்து ஆற வைக்க வேண்டும். பின்னர் இதை நன்றாக மிக்ஸியில் அரைத்து சாதத்தில் சேர்த்து அல்லது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |