காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் - அவசியம் தெரிஞ்சுகோங்க
பொதுவாக காலையில் எழுந்ததும் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அந்த உணவு நம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.
மக்களின் வழக்கமான பழக்கங்களில் ஒன்று தான் டீ, காபி குடிப்பது. ஆனால் இதை விட ஆரோக்கியமான உணவு என்ன ? எதை சாப்பிட வேண்டும்? என்பது எல்லோருக்கும் ஒரு வினாக்குறியாகவே உள்ளது.
காலையில் வெறுவயிற்றில் நாம் சில உணவுகளை உண்ணும் போது அது உடலில் பல பிரச்சனைகளை தீர்ப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேன்படுத்தும். அந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்
தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் | காலை எழுந்தவுடன் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். தேன் மிகவும் ஆரோக்கியமான உணவாகும். தேனில் இருக்கும் வைட்டமின், மினரல்ஸ், மற்றும் எல்சின் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேன்படுத்துவதோடு குடலில் தேவை இல்லாத கழிவுகளையும் அப்படியே வெளியேற்றும். இது தவிர 20 கிராம் தேனில் 8.4 கிராம் Fructose உம் 6.9 கிராம் குளுகோஸ் உம் இருக்கிறது. இது காலையில் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும். இதன் மூலம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. |
ஊறவைத்த பாதாம் | இந்த ஊறவைத்த பாதாமில் மெக்னீசியம் (Mg), வைட்டமின் E, புரோட்டின், நார்ச்சத்து, ஒமேகா 3, மற்றும் ஒமேகா 6, நல்ல கொழுப்பமிலங்கள் போன்றவை இருக்கிறது. 100 கிராம் பாதாமில் சுமார் 21 கிராம் ரோட்டின் இருக்கிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதற்காக ஒரு இரவு ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். தோல் நீக்க காரணம் - பாதாமின் தோலில் டானின் என்ற மூலப்பொருள் இருக்கிறது. இது பாதாமில் உள்ள சத்துக்களை உடலில் சேர விடுவதற்கு தடையாக இருக்கும். |
பப்பாளி பழம் | பழங்களில் காலையில் வெறுவயிற்றில் சாப்பிட கூடிய பழங்களில் ஒன்று தான் பப்பாளி பழம். இது உடலில் இருக்கும் கழிவுகளை எளிதில் வெயியெற்றும். இதனால் குடல் இயக்கம் சீராகும் வயிறு உப்புசம் நீங்கும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை இருக்காது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து LDL எனும் கெட்ட கொழுப்பை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேன்படுத்தும். |
முளைகட்டிய பச்சை பயறு | பச்சை பயிற்றை அப்படியே சாப்பிடுவதை விட முளைகட்ட வைத்த பச்சை பயறு சாப்பிட்டால் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது. இதில் அதிகளவான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், காப்பர், மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. |
ஊறவைத்த சியா விதைகள் | ஊறவைத்த சியா விதைகளில் புரோட்டின், நார்ச்சத்து, கால்சியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா 3க்கள் நிறைந்திருக்கின்றது. ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஒரு நாள் முன்னரே தண்ணீரில் ஊறவைத்து அதை மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் குடலின் உட்புற ஆரோக்கியத்தை மேன்படுத்தும். இதன் வழுவழுப்பான பகுதி உடலுக்கு அதிக நார்ச்சத்தை கொடுத்து வயிற்றை சுத்தப்படுத்தும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |