சூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு கிடைத்த விருது... கைதட்டி கொண்டாடிய ஜோதிகா! வைரல் வீடியோ
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’. இந்த படம் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியானது.
இதனையடுத்து, இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்று வருகிறது.
அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகளை வென்றுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இணையம் மூலம் இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டுள்ளது. அதன்படி மெல்பெர்ன் திரைப்பட விழாவில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கான விருதுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
விருதுக்கு கைக்கு வந்ததும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஆர்வத்துடன் பிரித்து பார்க்கும் வீடியோவை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
இரண்டு விருதுகளை தனது கணவர் வென்றதற்கு ஜோதிகா மிகவும் மகிழ்ந்து தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார். மேலும், இந்த விருதுகள் பெற்றதை அடுத்து ஒட்டுமொத்த சூரரைப் போற்று குழுவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.