விவசாயத்துக்கு உகந்த மண் இல்லாமல் வெற்றிகரமாக பயிர்செய்யும் இலங்கை றீ(ச்)ஷா பண்ணை
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக கொய்யாப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் மண் விவசாயத்துக்கு உகந்த மண் இல்லை என்றாலும் மண்ணின் தன்மையை மாற்றி கொய்யா மற்றும் மாதுளை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
சொட்டு நீர்ப்பாசன பொறிமுறையின் மூலம் மண்ணின் ஈரப்பதன் பேணப்படுவதால் வேர்களுக்கு ஈரப்பதன் எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்த பண்ணையில், பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கொய்யாப்பழம் பயிரிடப்பட்டு வருகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.