ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியான சலுகையை வழங்கிய அமேசான் நிறுவனம்!
அமேசான் நிறுவனமானது பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அதிலும், சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கும் பல்வேறு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சாம்சங், ரியல்மி, ரெட்மி என பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து, சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது கூடுதல் தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 19,999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும்போது ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் மற்றும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐகூ Z3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 16,740 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 18,990 விலையில் அறிமுகமாகி தற்போது ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 15,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக இதன் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.