சிறந்த கேமரா கொண்ட 5 ஸ்மார்ட் போன்கள்! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்களின் தொகுப்பை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத நபர்கள் என்றால் யாரையும் கூறிவிட முடியாது.
ஏனெனில் நமது தேடுதல், பல வேலைகளை அமர்ந்த இடத்திலிருந்து கொண்டே ஸ்மார்ட்போன் மூலம் செய்து முடித்துவிடலாம்.
அதிலும் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்கள் என்றல் விலை அதிகமாக இருந்தாலும் அவ்வளவாக யாரும் யோசிப்பதில்லை. இங்கு ரூ.50 ஆயிரத்திற்குள் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்களை தெரிந்து கொள்வோம்.
Honor 200 Pro
Honor 200 Pro ஸ்மாரட்போனாது அருமையான கேமரா மற்றும் விரைவான சார்ஜிங் திறன் கொண்டதாகும். 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6.7 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளம், 125 ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் என்ற வயதியை கொண்டுள்ளது.
Vivo V40 Pro
Vivo V40 Pro என்ற ஸ்மாரட் போனானது 50 MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளதுடன், AI தொழில்நுட்பங்களை வழங்குகிறது. 6.7 இன்ச் டிஸ்பிளே, Li-Ion 5500 mAh பேட்டரியுடன் வேகமான சார்ஜிங் கொண்டுள்ளது.
OnePlus 12R
OnePlus 12R இந்த ஸ்மாரட்போன் 5500mAh பேட்டரி, 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி என டிரிபிள் கேமரா செட் அப் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. 6.68 இன்ச் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ், tereo speakers வசதிகள் உள்ளது.
Xiaomi 14
Xiaomi 14-ல் 50 எம்பி + 50 எம்பி + 50 எம்பி என்ற டிரிபிள் கேமரா செட் அப் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் சக்திவாய்ந்த Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 6.36 இன்ச் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் வசதியும் கொண்டுள்ளது.
Samsung Galaxy A55
Samsung Galaxy A55ல் சிறந்த செல்ஃபிக்களுக்கு 32 MP முன் கேமரா மற்றும் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த படங்களை எடுக்க OIS உள்ளது. மெயின் கேமரா 50 எம்பி + 12 எம்பி + 5 எம்பி கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் Fingerprint, Li-Ion 5000 mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |