தமிழ்நாட்டில் இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள்
தமிழ்நாட்டில் கட்டாயமாக பார்க்கக்கூடிய ஐந்து முக்கியமான சுற்றுலா தளங்களைக் குறித்த தொகுப்பினை தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு
இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு வரலாற்று சிறப்பு மிகுந்த மாநிலமாக தலைசிறந்து விளங்குகின்றது. தமிழ்நாட்டில் எண்ணற்ற வரலாற்று சிறப்பு கொண்ட இடங்கள் மற்றும் மனதை மயக்கும் இயற்கை என பல இடங்கள் உள்ளது.
அவற்றில் வெறும் 5 இடங்களை மட்டும் தற்போது தெரிந்து கொள்வோம். ஏனெனில் இவை உலக சுற்றுலாதளங்களில் சுற்றிப்பார்க்கக்கூடிய இங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
ஏனெனில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவே உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு புகழ்பெற்ற மற்றும் பிரமிக்க வைக்கும் வரலாறு இருக்கின்றது.
தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களாகப் பார்க்கக்கூடிய இடங்களாக சென்னை, மாமல்லபுரம், பூம்புகார், காஞ்சிபுரம், கும்பகோணம், தராசுரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேளாங்கன்னி நாகூர், சித்தன்னவாசல், கழுகுமலை, குற்றாலம், ஒகனேகல், பாபநாசம், சுருளி நீர் தேக்கம், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஏலகிரிமலை, முதுமலை, முண்டன்துறை, களக்காடு, வேடந்தாங்கல், அண்ணா உயிரியல் பூங்கா ஆகியவை தமிழ்நாட்டின் சில முக்கிய சுற்றுலாதலங்கள் ஆகும்.
மேலே கூறப்பட்ட இடங்களில் மிகவும் முக்கியமான இடங்களான மாமல்லபுரம், சென்னை, தஞ்சாவூர், கொடைக்கானல், கன்னியாகுமரி இவற்றினை குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடி முனையில் பெருநிலப்பரப்பில் இருக்கும் கன்னியாகுமரி பல்வேறு தளங்களை விட சிறப்பு வாய்ந்ததாகவும். இங்கு மூன்று முக்கிய நீர்நிலைகளான அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் சங்கமிக்கின்றது.
புவியியல் ரீதியை கொண்ட ஒரே இடமான கன்னியாகுமரியில், பெர்ணமி நாட்களில் ஒரே மாதத்தில் சூரிய அஸ்தமானம் மற்றும் சந்திரன் உதிக்கும் காட்சியை இங்கு மட்டுமே காண முடியும். மேலும் திருக்குறள் படைப்பினை எழுதிய திருவள்ளுவருக்கு 133 அடி உயர்த்தில் சில வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையானது மக்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து விவேகானந்தர் பாறை, காந்தி நினைவிடம், கன்னியாகுமரி மெழுகு அருங்காட்சியம், பகவதி அம்மன் கோவில், 2000 ஆண்டு சிறப்பு மிக்க தோமா ஆலயத்தையும் கண்டு களிக்கலாம்.
மாமல்லபுரம்
இந்தியாவில் உலக பாரம்பரிய கலாச்சார தளங்களி்ல் ஒன்றாக மாமல்லபுரம் இருக்கின்றது. சிற்பக்கலையில் உலக புகழ்பெற்று விளங்கும் இதனை மகாபலிபுரம் என்றும் அழைப்பதுண்டு.
அதாவது அர்ஜுனனின் தவறம், கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து, சிற்பக்கலை அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம் மற்றும் கடற்கரை என அட்டாகாசமான இடங்கள் இங்கு உள்ளது.
சென்னை
இந்தியாவின் மிக முக்கிய தொழில் மற்றும் வணிக மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகும் இருப்பது சென்னை ஆகும். தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னை, இன்று உலகில் அதிகம் பார்வையிடப்படும் நகரங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.
சென்னையின் அடையாளத்தை முதன்முதலாக பிரதிபலிப்பது எதுவென்றால் அங்கு இருக்கும் மெரினா கடற்கரை தான். வங்களா விரிகுடாவில் அமைந்துள்ள இந்த மெரினா கடற்கரையில் பொழுதை கழிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாகவே விரும்புகின்றனர்.
சென்னையில், கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், எலியட்ஸ் கடற்கரை, விஜிபி கோல்டன் பீச், ஆயிரம் விளக்கு மசூசி, கபாலீஸ்வரர் கோவில், செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா என பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சுற்றுலா பயணிகளை கவரும் சிறப்பான இடங்களில் ஒன்றாகும். திராவிடக் கட்டிடக்கலையின் மகத்துவதத்தினை பறைசாற்றும் கோவில்களைக் கொண்ட தஞ்சாவூரில், மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் இருக்கின்றது.
பிரமாண்டமான 'லிங்கமாக' அருந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில், கி.பி. 1010 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
இந்த கோவிலின் பிரதான கோபுரமானது 216 அடி உயரம் கொண்டதுடன், உலகிலேயே மிக உயரமான ஆலய கோபுரங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
கோவிலின் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் ஆனதுடன், அற்புதமான கட்டமைப்பும் கொண்டுள்ளது. மேலும் இங்கு பார்க்க வேண்டிய இடங்களான சரஸ்வதி மஹால் நூலகம்,கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் ஐராவதேஸ்வரர் கோவில் என பல இடங்கள் உள்ளது.
கொடைக்கானல் :
வெளிநாட்டு பயணிகளை அதிகம் கவரும் கொடைக்கானல் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாக இருக்கின்றது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், பசுமையான மலைகள், அருவிகள், அழகிய ஏரிகள் என காணப்படுகின்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலரும் இப்பகுதியின் மற்றுமொரு காட்சிப் பொருளாக உள்ளது.
கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு கொடைக்கானல் சுற்றுலா தளம் என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. மலைப்பகுதியினை விரும்புபவர்களுக்கு இது அருமையான தளமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |