ஊட்டச்சத்து குறைபாடுகளுக்காக Beplex Forte மாத்திரைகள்
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு தேவையான சத்துக்கள் பெறப்படுகிறது.
சத்துக்களை உடல் கிரகிக்க முடியாமல் போகும் போது ஊட்டச்சத்து குறைபாடு எழலாம், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் பல நோய்களுக்கும் காரணமாகிறது.
இதைப் போக்கவே Beplex Forte மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இதில் மினரல்கள், மல்டிவைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.
இதயம், குடல் மற்றும் நரம்பு மண்டலம் சீராக வேலை செய்ய ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம்.
இதில்
Thiamine Mononitrate IP, Riboflavin IP, Nicotinic Acid IP, Niacinamide IP, Pyridoxine IP, Calcium Pantothenate IP, Folic acid IP, Vitamin B12 IP, Vitamin C IP, Biotin USP, Light Magnesium Oxide IP Equivalent to Elemental Magnesium 32.4mg ஆகியவை உள்ளன.
* வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
* பலவீனம் மற்றும் சோர்வை போக்குவதால் நோய்தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
* வளரும் குழந்தைகளில் பசியின்மை மற்றும் வளர்ச்சி விகிதத்தை மேம்படுத்துகிறது.
* பி வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஜிங்க் சத்து மூளை செயல்பாடுகளை சீராக்குகிறது, உடலை சுறுசுறுப்பாக்குகிறது.
* வைட்டமின் சி மற்றும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
பக்கவிளைவுகள்
மலச்சிக்கல்
வயிற்று கோளாறு
குமட்டல்
இது பொதுவானதே, நாளடைவில் படிப்படியாக சரியாகிவிடும், பக்கவிளைவுகள் தீவிரமானால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக் கொள்வது ஆபத்தை உண்டு பண்ணலாம்.
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |