ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்தும் குப்பை பொறுக்கும் பாட்டி- காண்போரை வியக்க ட்ரெண்டிங் காணொளி
பெங்களூரில் குப்பை பொறுக்கும் பாட்டி ஒருவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதும், பாட்டு பாடுவதும் இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறது.
ஐப்பானில் 7 ஆண்டுகள் வசித்த பிச்சை எடுக்கும் பாட்டி ஒருவர், பெங்களூருவில் சரளமாக ஆங்கிலம் பேசுவதும், பாட்டு பாடி அசத்துவதும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சிசிலியா மார்கரெட் லாரன்ஸ் என்ற அந்த பாட்டி தன்னை பற்றி பேசுகையில், ஜப்பானில் 7 வருடம் இருந்ததாகவும், வாழ்க்கையின் அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்துகொண்டதுடன் பாடலை ஆங்கிலத்திலேயே பாடி காண்போரை வியக்க வைத்துள்ளார்.
இவரின் செயலுக்கு பல ஆயிரக்கணக்கானோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பாட்டியை காண பெங்களூருவில் உள்ள மக்கள் குவிகின்றனர்.
மேலும், அந்த பாட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படமும் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறது.